காஞ்சி மாவட்ட துணை செயலாளர்கள் தாம்பரம்
ப.பூவிழி, மு.ச.ரஞ்சன், தோழர் சாமுவேல் ஆகியோர் ஒருங்கிணைப்பில் காஞ்சி
மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார்.
'விடுதலை சிறுத்தைகள் 100 விழுக்காடு இளைஞர்களை கொண்ட இயக்கம். இனியும் பொறுத்துக்கொள்ள வேண்டாம் என்று எந்த பொறுப்புமின்றி நான் முடிவெடுத்தால் தமிழ்நாடு போலீஸ் என்ன செய்தாலும் இங்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியுமா ? மிஞ்சி மிஞ்சி என்ன செய்வார்காள் குண்டாசும் தேசிய பாதுகாப்பு சட்டமும் போடுவார்கள். துப்பாக்கி சூடு நடத்துவார்கள் . இதற்கு பயந்தவர்களா நாங்கள் ? இதற்கு முன் பார்க்காதவர்களா ? சிலருக்கு வேண்டுமானால் இப்போது குண்டாசும் தேசிய பாதுகாப்பு சட்டமும் புதிதாக இருக்கலாம் . அரச ஒடுக்குமுறைகளினால் வளர்ந்தவர்கள் நாங்கள். இதனாலேயே போலீசுக்கு நாம் என்றும் நன்றிக் கடன்பட்டவர்கள். சும்மா தூங்கிக் கொண்டிருந்தவர்களை பிடித்துக் கொண்டு போய் நீ சிறுத்தையா ? எங்கே சீறு பார்க்கலாம் என்றார்கள். அவனும் சீறினான் விடுதலை சிறுத்தையாய்'.
'அடங்கமறு என்று சொன்ன திருமாவளவன் தான் அமைதியாய் இரு என்கிறான். அடங்க மறுப்போம் என்று சொல்லும் திருமாவளவன் தான் அமைதி காப்போம் என்கிறான். எங்கள் அமைதி அரச ஒடுக்குமுறைக்கு பயந்தோ சாதி வெறியர்களுக்கு அஞ்சியோ அல்ல. எங்கள் நோக்கம் அடுத்த தேர்தல் இல்லை. எங்கள் பயணம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அடுத்த தலைமுறைக்கானது. ஒரு செயலின் தொடக்கத்தை போல அதன் முடிவையும் அறிந்தவனால் தான் இவ்வாறு முடிவெடுக்க முடியும்'.
- எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன்.
------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.