Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு.


 
ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் கருப்பு சூலைத் திங்களாக நினைவுகூரப்பட்டு வருகிறது. கருப்பு சூலையின் 30ஆம் ஆண்டு நினைவையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சூன் 7 முதல் சூலை 26 வரை தமிழகமெங்கும் நினைவுக் கருத்தரங்கு நடைபெறும் என்று கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் அறிவித்தார். அதன் முதல் நிகழ்வாக சூன் 7 அன்று காஞ்சிபுரத்தில் கருப்புசூலை நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. காஞ்சி மாவட்டச் செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாநில நிர்வாகிகள் ஏ.சி.பாவரசு, உஞ்சைஅரசன், எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிறைவாக, சிங்கள இனவெறியர்களால் கொல்லப்பட்ட குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகியோரின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்து தலைவர் எழுச்சித் தமிழர் நினைவுரை ஆற்றினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...