05.06.2013, காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மதுராந்தகம் பகுதியில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் மதுராந்தகம் ஆர்.ஏ.ஆர். திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்றது.
செயற்குழுவில் சூலை 7 மாவீரன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர் பிறந்த மதுராந்தகம், கோழியாளம் கிராமத்தில் தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக தலைவர் தலைமையில் நடைபெறும் விழாவினை சிறுத்தைகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிப்பது.
ஆகத்து 17 தலைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழர் எழுச்சி நாளில் தலைவரின் பொன்விழா நிறைவு மாநாட்டினை சிறப்பிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் மதுராந்தகம் நகர செயலாளர் அப்பாதுரை வரவேற்று பேசினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் தென்னவன், பூவிழி, இந்திரா அம்பேத்கர்வளவன், செங்கை தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகிகள் கலைவடிவன், வழ.தேவ அருள்பிரகாசம், முத்தமிழன், பாக்கம் பேரறிவாளன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.