இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
மரக்காணம்
கலவரத்தைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட தலைநகரங்களில் மே 2 ஆம்
தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தலைவர் எழுச்சித்தமிழர் அறிவிப்பு.
தருமபுரி, கடலூர், மரக்காணம் பகுதிகளில் தொடர்ந்து சாதி வெறியாட்டத்தினை
தூண்டிவரும் சாதி வெறி பிடித்த கும்பல் பாட்டாளி மக்கள் கட்சியினை தடை
செய்ய கோரியும், அதன் தலைவர்கள் ராமதாசு, குரு, அன்புமணி ஆகியோரை தேசிய
பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாவட்ட
தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைவர் எழுச்சித்தமிழர்
அவர்கள் அறிவித்துள்ளார்.
தலைவர் அவர்களின் ஆணையின்படி வருகின்ற
02.05.2013 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர்
காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவலான் கேட் அருகில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்திற்கு நமது மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம் நிர்வாகிகள் திரளான தோழர்களை அணிதிரட்டி வர வேண்டுகிறோம்.
மாணவர்களே, சமூக ஆர்வலர்களே, தலித் உணர்வாளர்களே, அரசு ஊழியர்களே சாதி வெறிக்கு எதிராக அணிதிரள்வோம் வாரீர் வாரீர்....
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...