Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரத்தில் டெசோ கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

காஞ்சிபுரத்தில் டெசோ கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி.

12.03.2013, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பு அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தத்தை மாணவர்கள், பொது மக்கள், வியாபாரிகள் என அனைவரும் ஆதரவு அளித்து தங்களது தமிழின உணர்வை வெளிப்படுத்தி வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்தனர்.

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரி காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் சிங்கள இன வெறியன் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டு போராடிய காஞ்சிபுரம் டெசோ அமைப்பை சேர்ந்த தி.மு.க, தி.க ஆகிய கட்சியினருடன் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன் அவர்கள் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது செய்யப்பட்டனர்.



 
 
 
 
கைது செய்யப்பட்டவர்களை காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள நாகேஷ் திருமண மஹாலில் வைத்திருந்த காவல் துறை மாலை 6 மணிக்கு டெசோ கூட்டமைப்பு தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்தனர்.

உடன் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, நகர செயலாளர் திருமாதாசன், ஊடக மையம் மதி.ஆதவன், நகர பொருளாளர் பாலாஜி, நகர முற்போக்கு மாணவர் கழக செயலாளர் கண்ணன் உள்ளிட்ட திரளான சிறுத்தைகள் கைதாகினர்.

நிறைவில் காஞ்சி தி.மு.க. நகர செயலாளர் CVMA. சேகர் கைதானாவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிபுரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...