காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம், புதுப்பட்டினம் ராஜா நகர் சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளை அரசு
அகற்றுவதை தடுக்க மக்களை திரட்டி போராடிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், துணை செயலாளர் கிட்டு
ஆகியோரை தமிழக அரசு காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தாக்கி 9 நிர்வாகிகளை
கைதும் செய்தது.
மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், துணை செயலாளர் கிட்டு ஆகியோரைத் தவிர 7 பேர் பிணையில் வெளி வந்தனர்.
மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், துணை செயலாளர் கிட்டு ஆகியோரை பிணையில் வெளி வராத படிக்கு காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று திருக்கழுக்குன்றம் நீதி மன்றத்துக்கு அழைத்து வந்து புதிதாக ஒரு வழக்கு போட்டுள்ளனர். இது வரை 10 க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. கண்டனம் தெரிவிப்போம்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிபுரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், துணை செயலாளர் கிட்டு ஆகியோரைத் தவிர 7 பேர் பிணையில் வெளி வந்தனர்.மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், துணை செயலாளர் கிட்டு ஆகியோரை பிணையில் வெளி வராத படிக்கு காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று திருக்கழுக்குன்றம் நீதி மன்றத்துக்கு அழைத்து வந்து புதிதாக ஒரு வழக்கு போட்டுள்ளனர். இது வரை 10 க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. கண்டனம் தெரிவிப்போம்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிபுரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.