இணையதள சிறுத்தைகளின் "ஊடகத்தினூடாக மாற்று அரசியல் கருத்தரங்கம்".
சனவரி
27, 2013 இணையதள சிறுத்தைகள் ஒருங்கிணைத்த "ஊடகத்தினூடாக மாற்று அரசியல்
கருத்தரங்கம்" தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
அழைப்பாளர்களாக கல்வியாளர், ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா, டெக்கான் க்ரானிக்கள்
பகவான் சிங், புதிய தலைமுறை குணசேகரன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்,
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், தொழில்நுட்ப ஆலோசகர் நரேன் ஆகியோர்
கலந்து கொண்டு தத்தமது துறைகளின் வளர்ச்சி குறித்தும் அத்துறைகளில்
ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கு நாங்கள் பெரிதும் துணை நிற்போம் என்றும் இணையதள சிறுத்தைகளுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
நிறைவுரை ஆற்றிய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஊடகத்தின் வாயிலாக நல்ல கருத்துக்களையே பிறர் மணம் புண்படும்படி அமைந்து விடாமல் பதிவிட வேண்டும் என்று இணையதள சிறுத்தைகளுக்கு கருத்துரை வழங்கினார்.
மருத்துவர் ஐசுவர்யா அனைவரையும் வரவேற்று பேசும் போது தன்னை அதிகாரப்பூர்வ விடுதலைச் சிறுத்தையாக பிரகடனப் படுத்திக்கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகளின் ஊடக மைய மாநில செயலாளர் அறிவமுதன் தொகுத்து வழங்கினார்.
ஊடக மைய மாநில துணை செயலாளர்கள் தோழர் அகரன், முதல்வன், ஆதன், சிறீதர், ராஜசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடக மைய மாநில துணை செயலாளர் கட்சியின் புகைப்பட கலைஞர் தோழர் சூம் எழில்இமயன் நன்றி கூறினார்.
அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கலந்து கொண்ட திரளான இணையதள சிறுத்தைகளுக்கு இந்த கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.