Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் படத்திறப்பு - நிதியளிப்பு பொதுக்கூட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
 

கடந்த திசம்பர் 9, 2012 அன்று சாதி வெறி சமூக விரோத கும்பாலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட காஞ்சி மாவட்ட துணை செயலாளர் மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களின் படத்திறப்பு - நிதியளிப்பு பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில், தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் வீரவணக்க உரையோடு எழுச்சியோடு நடைபெற்றது. 

மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் காஞ்சி த. பார்வேந்தன் அவர்கள் பொதுக்கூட்டத்தை நெறிப்படுத்தினர். தோழர் பாசறை செல்வராசு அவர்கள் முன்னிலை வகித்தார். 
மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களின் இளைய மகள் தங்கநிலா, எங்கள் தந்தை இன்று எங்களோடு இல்லை என்றாலும் எனது பெரியப்பா எழுச்ச்த்தமிழர் அவர்கள் தலைமையேற்று எங்கள் அம்மாவுடன் நானும், என் அக்காவும் நமது கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று பேசிய போது தலைவர் உட்பட அனைத்து சிறுத்தைகளும் கண்கலங்கினர். 
நிறைவாக தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகவும், சாதி வெறியர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் தமிழ்நாட்டு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறது என்று காவல்துறையினரை கண்டித்தும் சாதி வெறியைத் தூண்டும்படி பேசும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசினார். மறைந்த போராளி அம்பேத்கர்வளவன் அவர்களின் மனைவி நா.இந்திரா அவர்களுக்கு அம்பேத்கர்வளவன் அவர்கள் வகித்து வந்த காஞ்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பு வழங்கினார். 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை முகாம் சார்பாக மாநில பொருளாளர் அண்ணன் முகமது யூசுப் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் குடும்பத்திற்கு நிதி வழங்கினார். காஞ்சி மாவட்டம் சார்பாக மாவீரனது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. 
மேலும் இந்நிகழ்வில் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் காஞ்சி த. பார்வேந்தன் அவர்கள் ஒருங்கிணைப்பில் அ.தி.மு.க. மின் வாரிய தொழிற்சங்க காஞ்சி மாவட்ட துணை செயலாளர் பருத்திகுளம் சேகர் அவர்கள் தலைவருக்கு வீரவாள் வழங்கி தனது தோழர்கள் 500 பேர்களோடு கட்சியில் தங்களை சிறுத்தைகளாய் இணைத்துக்கொண்டனர். 
இந்நிகழ்வில் மக்கள் மன்றம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறுவர்கள் பறையடித்து நடனம் ஆடினர். தலைமை நிர்வாகிகள் தோழர் இளஞ்சேகுவேரா, வழக்கறிஞர் எழில் கரோலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 மேலும் காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, செயலாளர் டேவிட், மாவட்ட துணை செயலாளர்கள் மேனகாதேவி கோமகன், தென்னவன், பூவிழி, முகமது அனிபா, கிட்டு, ரஞ்சன்,எழிலரசு, இளையவளவன், வாலாசாபாத் உதயசூரியன், அசோக் குமார், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் தேவஅருள் பிரகாசம், முத்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் சு.தம்பிதுரை, மதி.ஆதவன், ஏ.வி.இராவணன், செஞ்சுடர், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் நாகராசு, சத்யா, நகர நிர்வாகிகள் பாலாஜி, புல்லட் சதீசு, திராவிடன், கண்ணன், கலந்து கொண்டனர். 
செய்தி: 
ஊடக மையம் - விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, 
காஞ்சிபுரம் மாவட்டம்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...