இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

காஞ்சிபுரம்
மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த காரனை கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற
துப்பாக்கி சூட்டில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட
சமூகத்தை சேர்ந்த தலித் தோழர்கள் பஞ்சமி நில மீட்பு போராளிகள் சான் தாமசு,
ஏழுமலை ஆகியோர்களுக்கு நினைவிடம் எழுப்ப அரசிடம் போராடி பெற்ற நிலத்தில்
போராளிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுதிட்ட அண்ணன் எழுசித்தமிழர்
தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் காஞ்சி மாவட்ட செயலாளர்
சூ.க.விடுதலைச்செழியன், மாவட்ட துணை செயலாளர் கிட்டு அவர்கள் மீதும் வழக்கு
தொடர்ந்திட்ட சாதி இந்துக்களை கண்டித்தும், பொய் வழக்கினை திரும்ப பெற
வலியுறித்தி தமிழக அரசைக் கண்டித்தும் மாமல்லபுரம் நகரில் 20.11.2012
செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின் நிறைவாக காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன்
அவர்களின் கண்டன உரையில் அண்ணன் எழுசித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்
மீது தொடுத்த பொய் வழக்கினை திரும்ப பெற வேண்டும் என்று பேசினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...