Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரத்தில் போராளித் தலைவருக்கு பொற் காசுகள் வழங்கும் விழா !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

காஞ்சிபுரத்தில் போராளித் தலைவருக்கு பொற் காசுகள்  வழங்கும் விழா (04.11.2012)அன்று காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பகுதியில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சி மாவட்டச் செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் எழுச்சித் தமிழர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் தலைவர் நிறைவுரை வழங்கினார். "நமக்கென ஒரு ஊடகம் வேண்டும். நமக்கென்று உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. இந்த கட்சியில் பெரிய செல்வந்தர்கள் இல்லை, முதலாளிகள் இல்லை,ஒப்பந்ததாரர்கள் இல்லை.என்னைப் பொருத்தவரை நீங்கள் தான் என்னுடைய முதலாளிகள்.அதனால் தான் நமக்கென்ற ஊடகத்திற்குக்காக நான் உங்களையே நாடி வந்திருக்கிறேன்.என் மூச்சிக்கு பின்னும் இந்த இயக்கம் வலிமையோடு வளரவேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் கையேந்தி நிற்கிறேன்"என்றார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...