Sporty Magazine official website | Members area : Register | Sign in

தமிழக அரசின் மீது விடுதலைச் சிறுத்தைகள் தொடுக்கும் பஞ்சமி நில மீட்பு போர் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தலைவர்  எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் பஞ்சமி நில மீட்பு தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது.

கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

1 . காஞ்சி மாவட்டம் காரணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பஞ்சமர்களுக்கே வழங்கிடு.
2 . பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க தமிழக அரசு நியமித்த விசாரணைக் குழுவை செயல்படுத்து.
3 . 1994 ம் ஆண்டு பஞ்சமி நில மீட்பு உரிமைப் போரில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சான் தாமசு,  ஏழுமலை ஆகியோரின் குடும்பத்திற்கு தல ௨ ஏக்கர் நிலம் வழங்கிடு.

தொடர் போரரட்டங்கள் முடிவடைந்த பின்னர் 07 .11 .2012 அன்று ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போர் நடைபெறும்.

தோழர்கள் அனைவரும் அந்தந்த பகுதிக்குள் நடக்கும் போராட்டங்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவண்
சூ.க.விடுதலைச்செழியன்.
காஞ்சி மாவட்ட செயலாளர்.







வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...