Sporty Magazine official website | Members area : Register | Sign in

மண்ணுரிமை போராளிகளுக்கு வீரவணக்கம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் மண்ணுரிமை போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர் .இந்த ஆண்டும் பஞ்சமி நில மீட்பு போராளிகளான ஜான் தாமஸ் -எழுமலை ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு காஞ்சிபுரம் மாவட்டம் காரணையில் 10.10.12 காலை 11 மணிக்கு நடைபெற்றது . எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் அவர்கள் பங்கேற்று போராளிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் பின்னர் கட்சியின் சார்பில் சொந்தமாக வாங்கப்பட்ட நிலத்தில் மண்ணுரிமை போராளிகளுக்கு மணிமண்டபம் எழுப்ப அடிக்கல் நாட்டினார் மேடையில் எழுச்சித் தமிழர் பேசும்பொழுது பஞ்சமி நில வரலாற்றை பற்றி பேசினார் . இந்நிகழ்வில் சூ .க .விடுதலைச்செழியன் ,பார்வேந்தன் ,சிறுத்தை கிட்டு ,தென்னவன் மற்றும் காஞ்சிபுர மாநில, மாவட்ட ,ஒன்றிய சிறுத்தைகளும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...