Sporty Magazine official website | Members area : Register | Sign in

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை நிராகரிக்க ஆர்ப்பாட்டம்

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
ஆகத்து 22, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை கருணை மனுவை நிராகரித்த இந்திய அரசை கண்டித்து, மற்றும் அவர்களை விடுதலை செய்ய வலியிருத்தியும் நாடு முழுவதும் விடுதளைசிருதைகள் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் நிகழ்வாக் காஞ்சி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட் தலைநகரமான காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆராட்டதிர்க்கு காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை வகித்தார். காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன், எழிலரசு, இளையவளவன், தென்னவன், கிட்டு, பூவிழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக காஞ்சி  நகர செயலாளர் திருமாதாசன் வரவேற்ப்புரை ஆற்றினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் முகமது யூசுப் கண்டன் உரை ஆற்றினார். மேலும் இந்திய அரசை கண்டித்தும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியிருத்தியும்  முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 


சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் பேசியதாவது, குற்றத்தை செய்யாத இந்த நிரபராதிகள் காங்கிரஸின் காழ்புணர்ச்சியின் காரணமாக இப்படி அநியாயமாக தண்டிக்க பட இருக்கிறார்கள் இதனை தடுக்க வேண்டும். எந்த குற்றத்தையும் செய்யாமல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த அரசு இவர்களை விடுவிக்க வேண்டும். கொலை குற்றத்திற்கு கொலை தன் தீர்வு என்று ஆகாது என எழுச்சிதமிழர் கூறியுள்ளார் ஆகவே அணைத்து மக்களின் கோரிக்கையான இதை கருத்தில் கொண்டு தூக்கில் இடுவதை தவிக்க வேண்டும்.

இறுதியாக மா.ஸ்டான்லி நன்றியுரை நிகழ்த்தினர். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான விடுதலைச்சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...