Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி ஒன்றிய, நகர, செவிலிமேடு பேரூர் செயற்குழு கூட்டம்!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர, செவிலிமேடு பேரூர் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் ராமாஸ் கபேவில் 14 .06 .2011 செவ்வாய்கிழமை அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காஞ்சி மாவட்ட துணை செயலாளர் ஆ.அம்பேத்கர்வளவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மா.ஸ்டான்லி, நா.டேவிட், துணை செயலாளர் நாகராசு, திராவிடன், கொளத்தூர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.

இச்செயற்குழு கூட்டத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் மாவட்ட ஊடகமைய செயலாளர் மதி.ஆதவன், சு.தம்பிதுரை, நா.அம்பேத்கர், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் 300 மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் வருகின்ற கட்சி நிகழ்சிகளில் பங்கெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக அ.பாலாஜி நன்றியுரை ஆற்றினார்.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. வருகின்ற ஜூன் 17 தாத்தா ரெட்டைமலை சீனுவாசன் அவர்கள் பிறந்தநாளில் அவர் பிறந்த மண்ணில் விடுதலைச்சிறுத்தைகளால் எழுப்பப்பட்ட மணிமண்டபத்தில் குடும்பத்தோடு கலந்து கொள்ளும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பது.
2. வருகின்ற ஜூன் 28 விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது. அதில் காஞ்சி மாவட்டத்தின் சார்பில் கலந்துகொண்டு  சிறப்பிப்பது.
3. ஆகத்து 17 நமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பிறந்தநாள் தமிழர் எழுச்சிநாளாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நகர் முழுவதும் சுவரொட்டி, விளம்பர தட்டிகள் , ஒலிப்பெருக்கி வைத்தும், நலத்திட்டங்கள் செய்தும் கொண்டாட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
4.  தமிழக அரசு உடனடியாக இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்திட வேண்டும்.
5. பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை சீராக பயன்படுத்திட வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...