புதிய சட்டமன்ற கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைப்பது, சமச்சீர் கல்வி திட்டம் தற்காலிக ரத்து போன்ற தமிழக அரசின் முடிவுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம், திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்படுவது தவறானது. புதிய சட்டமன்ற கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்திருப்பது, மக்களின் பலகோடி ரூபாய் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல். பள்ளி கல்வி கட்டணத்தை வரைமுறை
படுத்துவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.