விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் தீப்பொறி தீந்தமிழன் மரணம் !
காஞ்சிபுரம் மாவட்ட இரங்கல் செய்தி.
03-02-2011, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் தீப்பொறி முருகன் (எ) தீந்தமிழன் மதுரை அரசு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொண்டு தீப்பொறி தீந்தமிழன் அவகளின் உடலை இடுகாட்டில் இறுதி சடங்குகளை செய்யும் வரையில் இருந்து தீப்பொறி தீந்தமிழனுக்கு வீரவணக்கம் செலுத்தினார். கட்சியின் சார்பாக 1 லட்சம் நிதி வழங்குவதாக எழுச்சித்தமிழர் அறிவித்தார். இடுகாட்டில் முதலில் 25 ஆயிரம் ரூபாய் அவருடைய மகனிடம் வழங்கப்பட்டது . தீப்பொறி தீந்தமிழன் தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது .தோழருக்கு காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச்சிறுத்தகளின் வீரவணக்கம்.