Sporty Magazine official website | Members area : Register | Sign in

கரும்புலி முத்துக்குமார் நினைவுநாள் பொதுக்கூட்டம் - திருச்செந்தூரில் முத்துக்குமாரின் சிலையை திறந்துவைத்தார் எழுச்சித்தமிழர்!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கரும்புலி முத்துகுமாரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் என்ற கிராமத்தில் முத்துகுமாரின் மார்பளவு வெண்கல சிலை திறக்கப்பட்டது.

அதன் பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் வ .வு .சி திடலில் வீரவணக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது மேடையில் வைக்கப்பட்டு இருந்த முத்துகுமாரின் சிலைக்கு மலர்தூவி  ஒரு நிமிடம் விடுதலைச்சிறுத்தைகள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

முத்துகுமாரின் சித்தப்பா,பாட்டியும் முத்துகுமாரின் சிலையை பார்த்து கண்ணிர் விட்டு கதறி அழுதனர், மாவட்டச் செயலாளர் தமிழினியன் வரவேற்புரை நிகழ்த்தினர் கரும்புலி முத்துக்குமார் பாசறையின் முதன்மைச்செயலாளர் சங்கத்தமிழன் ,பொதுச்செயலாளர் கலைகோட்டுதயம் ,முகமது யூசப் ஆகியோர் பேசினர்.




இறுதியில் வீரவணக்க உரையை எழுச்சித்தமிழர் எழுச்சியோடு பேசினார். அவர் பேசியதாவது: முதலில் தம்பி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் ,உண்மையான தமிழ் உணர்வாளர் யார் ? என்று தம்பி முத்துக்குமாருக்கு தெரிந்து இருக்கிறது அதனால் தான் சாகும் தருவாயில் கூட நான் எறிந்த செய்தியை அண்ணன் பிரபாகரனுக்கும் ,அண்ணன் திருமாவளவனுக்கும் உடனே தெரியப்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு இறந்து போனான் தமிழகத்து தம்பி முத்துகுமாருக்கு மேதகு.பிரபாகரனே ஈழத்தில்வீரவணக்கம் செலுத்தினர் அந்தளவிற்கு முத்துகுமாரின் ஈழத்தமிழர்களுக்காக செய்து இருக்கிற தியாகம் மகத்தானது ஆனால் இங்குள்ள போலி தமிழ் தேசியவாதியும் ,சாதிய தமிழ் தேசியவாதியும் ,திருமாவளவனின் மீது சாதி முத்திரையை குத்த முயற்சிக்கிறார்கள்.திருமாவளவன் கட்சியை தொடங்கும் போதே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்று தான் பெயர் சுட்டினேன், சாதி ஒழிப்பை கொள்கையாக பிரகடனப்படுத்தினேன். தமிழகத்தில் மற்ற எல்லா தலைவர்களும் சாதி சங்கங்களை ஆரம்பித்து அதன்பின்னர் ஒட்டுக்காக தான் கட்சி பெயரை மாற்றி இருக்கிறார்கள் .எந்த ஒரு கட்சியும் சாதி ஒழிப்பை கொள்கையாக வைத்தது இல்லை திருமாவளவனை தவிர அதை நான் மார்தட்டி சொல்லுவேன்,திருமாவளவனின் மீது கல் எறிபவர்கள்,அவதூறு பரப்புகிறவர்கள் ஒரு நாள் திருமாவளவன் உண்மையான தமிழ் தேசியவாதி என்று அவனே திருமாவளவனின் மீது மாலை அணிவிப்பான் அது வரை விடுதலைச்சிறுத்தைகள் பொறுமை காக்கவேண்டும் என்று பேசினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...