காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் புரட்சியாளர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.டாக்டர் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் அருகில் சுமார் 300 விடுதலைச்சிறுத்தைகள் மௌன ஊர்வலமாக வீரவணக்க முழக்கங்களுடன் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் காஞ்சி.ஆ.அம்பேத்கர்வளவன் அவர்கள் தலைமையில் புறப்பட்டு புரட்சியாளர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் விப்பேடு அருள், காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன், நகர்.பாலாஜி, கண்ணன், காஞ்சி ஒன்றியத்தின் சார்பில் செயலாளர் ஸ்டான்லி, வடிவேலு, தம்பிதுரை, மாவட்ட ஊடக மையா செயலாளர் பருத்திகுளம் மதி.ஆதவன், திருப்புட்குழி அம்பேத்கர், வழக்கறிஞர் கார்த்திக் மற்றும் திரளான சிறுத்தைகள் புரட்சியாளருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.
புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு !
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
