Sporty Magazine official website | Members area : Register | Sign in

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எழுச்சித்தமிழர் கடும் கண்டனம்!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
இலங்கைத் தீவில் தமிழினமும். சிங்கள இனமும் இருபெரு தேசிய இனங்களாக வாழ்ந்துவந்தாலும் சிங்கள இனத்திற்கு, மூத்த இனமாக வாழ்ந்துவருவது தமிழினம்தான் என்பது வரலாற்று உண்மையாகும்!

இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு இலங்கைத் தீவில் அனுமதியில்லை என்று அறிவித்திருப்பதோடு, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாகவும், இலங்கை சிங்களருக்கே உரியதாகவும் அறிவித்திருப்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு நாட்டில் இரு தேசிய கீதங்களா? என்று கேள்வி எழுப்பும் ராஜபக்ஷே, ஒரே நாட்டில் இரு தேசிய இனங்கள் வாழும் வரலாற்று உண்மை மூடிமறைக்க முயல்கிறார் என்றும் ராஜபக்ஷேவின் இந்த இனவாத பாசிஸ போக்கில் இருந்து தமிழனத்தையும் தமிழீழகத்தையும் மீட்டெடுக்க உலகத்தமிழர்கள் ஒன்று திரட்டு போராட உறுதி ஏற்போம் என்று தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...