அக்டோபர் 25 எழுச்சித்தமிழரின் ஆலோசனைப்படி காஞ்சி மாவட்டத்தின் சார்பில் அவசர செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இச்செயற்குழுவிற்கு மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார்.
தீவிர உறுப்பினர் சேர்க்கையின் மேலிடப் பொறுப்பாளர்களாய் தலைவரால் புதிதாக நியமிக்கப்பட்ட முனைவர்.சு.மகாதேவன், தோழர் கௌதமன்,
தோழர் திருவிளங்குமார் ஆகியோரை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தினார்.
1.சட்ட மேலவை தேர்தலுக்கு ஆசிரியர்கள், பட்டதாரிகளைச் வாக்காளர் பட்டியலில் சேர்க்க குழு அமைப்பது.
2.தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியினை துரிதப்படுத்துதல் குறித்து.
3.வருகின்ற நவம்பர் 7 சோழிங்கநல்லூரில் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து.
4.திசம்பர் 26 தமிழர் இறையாண்மை மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து.
மேற்கண்ட தீர்மாணங்கள் தோழர்களின் கனத்த கரவொலியால் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தோழர் கௌதமன் அவர்களது பேச்சு சிறப்பாக இருந்தது. நிறைவாக முனைவர்.சு.மகாதேவன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
கூட்டத்தின் இறுதியில் தோழர் பனையூர் பாபு அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் புலால் உணவு வழங்கி சிறப்பித்தார்.
இச்செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகள் அம்பேத்கர்வளவன், கிட்டு, தென்னவன், பூவிழி, மேனகா, ரஞ்சன்,ரஜினி, இளையவளவன், ஆதவன், எழிலரசு, தமிழரசன், திருமாதாசன், அம்பேத்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வருகின்ற நவம்பர் 7 சோழிங்கநல்லூரில் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பனையூர் பாபு அவர்கள் தலைமையில் 5000 பேர் தங்களை விடுதலைச் சிறுத்தைகளாய் இணைத்துக் கொள்கின்றனர் என்பதனை மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தெரிவித்தார்.
சட்ட மேலவை தேர்தலுக்கு ஆசிரியர்கள், பட்டதாரிகளைச் வாக்காளர் பட்டியலில் சேர்க்க குழு அமைப்பு ! - மாவட்ட அவசர செயற்குழுவில் தீர்மானம்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...