விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் கொத்தடிமை ஒழிப்பு முன்னணி என்ற துணைநிலை அமைப்பு தொடங்கப்பட்டது . இந்த துவக்க விழா காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் நடந்தது . இதனால் செங்கல்பட்டு நகரமே விழா கோலம் பூண்டிருந்தது . நகரமெங்கும் சிறுத்தைகளின் கொடிபறந்ததுகாணும் இடமெல்லாம் விளம்பர பதாகைகளும் எழுச்சித்தமிழரின் படமும் இருந்தது .
விழாவில் தலைவர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரையாற்றினார் , மாநில செயலாளர் பு.கலைவடிவன் தலைமை தாங்கினார், காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைசெழியன் முன்னிலை வகித்தார், இரா.தமிழரசன் வரவேற்புரையாற்றினார், பொதுசெயலாளர் கலைகோட்டுதயம் ,செய்திதொடர்பாளர் வன்னியரசு , தனிசெயலாளர் வெற்றிசெல்வன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். காஞ்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர்வளவன், எழிலரசு மற்றும் திரளான சிறுத்தைகள் பங்கேற்றனர்.
முன்னதாக நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எழுச்சித்தமிழர் பத்தாயிரம் ரூபாய் பரிசும் பரிசுக்கோப்பையும் வழங்கினார் . எழுச்சித்தமிழருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது . விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர்,தந்தை பெரியார்,அன்னை மீனாம்பாள் , அயோத்திதாச பண்டிதர் , மாவீரன் ரெட்டைமலை சீனிவாசன் , சேகுவேரா, காமராசர் , காயிதேமில்லத் ,தந்தை தொல்காப்பியர் , கக்கன் , சான் தாமஸ் , ஏழுமலை ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டது விழாவின் துவக்கமாக புதுவை சித்தனின் "மக்கள் இசை " புத்தர் கலைக்குழுவின் "பறையாட்டம்" திருவண்ணாமலை "போர்ப்பறை" "கரகாட்டம்" "கொக்கிலி கட்டை ஆட்டம் " ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர் .
கொத்தடிமை ஒழிப்பு முன்னணி துவக்க விழா!
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
