Sporty Magazine official website | Members area : Register | Sign in

நாடு முழுவதும் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்போம் - விடுதலைச் சிறுத்தைகளுக்கு எழுச்சித்தமிழர் ஆணை!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
அக்டோபர் 10 பஞ்சமி நிலமீட்பு போராளிகள் சான் தாமஸ் - ஏழுமலை ஆகியோரின் நினைவு நாள் பொதுக்கூட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை பூமியில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன் அவர்கள் ‘நாடு முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சமி நிலங்களை கண்டறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தவேண்டும்’ என்றார். மதியம் ஒரு மணியளவில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பேசி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.

இப்போதுக்கூட்டத்திர்க்கு மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சிறுத்தை கிட்டு வரவேற்றார். பொருளாளர் இளையவளவன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.அம்பேத்கர்வளவன், தே.தென்னவன். பூவிழி. மேனகாதேவி, எழிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவரின் தனிச் செயலாளர் வெற்றிசெல்வன் மாநில கொத்தடிமை ஒழிப்பு முன்னணி செயலாளர் கலைவடிவன், துணைநிலை அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் செங்கை தமிழரசன், தமிழ்வளவன், தமிழினியன், பருத்திகுளம் மதி.ஆதவன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மற்றும் ஐந்தாயிரத்திற்கும் மேலான விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொண்டனர். முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.


முன்னதாக மாமல்லபுரம், வடகடும்பாடி, நல்லான்பிள்ளைபெற்றான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கட்சிக் கொடியை எழுச்சித்தமிழர் ஏற்றினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...