ஆகத்து 18 காஞ்சிபுரம் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் தாம்பரத்தை அடுத்த பள்ளிக்கரணையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் மண்டல சிறப்பு செயற்குழுவில்
நமது மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் மண்டல செயற்குழுவுக்கு செல்ல அனுமதி கடிதங்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை மேலிட மற்றும் துணை மேலிட பொறுப்பாளர்கள் , காஞ்சி மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் வழங்கினார். அவர்களுக்கு மண்டல செயற்குழுவில் கலந்துகொள்வதர்க்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இச்செயற்குழு கூட்டத்திற்கு காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞரணி செயலாளர் எழில் கரோலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் கராத்தே பாண்டியன், பு.பே.கலைவடிவன், தே.தென்னவன், வீ.கிட்டு, அம்பேத்கர்வளவன், பூவிழி, மேனகாதேவி, இளையவளவன், அனீபா, டேவிட், ஆதவன் உள்ளிட்ட திரளான விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள் :
1 எதிர்வரும் மண்டல சிறப்பு செயற்குழுவில் மாவட்ட,நகர,ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட தலைமையினால் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
2 தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியினை துரிதப்படுத்துதல் வேண்டும்.
3 செப்டம்பர் 26 அன்று நடைபெறும் தமிழர் இறையாண்மை மாநாட்டினை சிறப்பிப்பது.
4 சட்டக்கல்லுரி மாணவரை சட்டத்திற்கு புறம்பான முறையில் நிர்வானபடுத்தி தாக்கிய திருக்கழுக்குன்றம் காவல்துறையினருக்கு இச்செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
மேற்கண்ட தீர்மாணங்கள் தோழர்களின் கனத்த கரவொலியால் நிறைவேற்றப்பட்டது.