Sporty Magazine official website | Members area : Register | Sign in
இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
சட்டக்கல்லுரி மாணவர் அசோக்குமார் மீது தாக்குதல் - எழுச்சித்தமிழர் கண்டனம் !

ஆக 19 , சென்னையை சேர்ந்த சட்டக்கல்லுரி மாணவர் அசோக் தன் சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பொழுது பேருந்தில் வட மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவருடன் வாய்த் தகராறு ஏற்படுகிறது.
இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் இருவரையும் திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் இறக்கிவிடுகிறார். அங்கே இவர் தலித் சமுகத்தை சேர்ந்தவர் என்றதும் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் தாக்கப்படுள்ளார். அவர் நினைவிழந்த நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர். அசோக் மருத்தவமனையிலிருந்து வெளியேறி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அவர் காப்பாற்றபட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எழுச்சித்தமிழர் அவர்கள் மாணவர் அசோக்கை இன்று காலை அப்போல்லோ மருத்துவமனையில் சந்தித்து அறுதல் தெரிவித்தார். மேலும் இச்செயலை வன்மையாக கண்டித்த அவர் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென தெரிவித்தார். தமிழக அரசு இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
www.thiruma.net 

திருக்கழுக்குன்றத்தில் கடைகள் அடைப்பு !

திருக்கழுக்குன்றத்தில் இன்று காலை மாணவர்கள், பொதுமக்கள் 200&க்கு மேற்பட்டோர் திரண்டனர். சாலையில் மரம், கற்களை போட்டு தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருக்கழுக்குன்றத்துக்கு வரும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பஸ் நிலையம் முன்பு திரண்ட சிலர், ‘அசோக்குமாருக்கு உரிய நிவாரணம் தரவேண்டும், மாணவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோஷம் போட்டனர்.

செங்கல்பட்டு சப்&கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

செங்கல்பட்டு பார் சங்க பொதுக்குழு கூட்டம், இன்று அதன் தலைவர் விஜயகுமார், செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செங்கல்பட்டு சப்&கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு சட்டக் கல்லூரிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை கல்லூரி முன்பு திரண்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்று நீதிமன்றத்தை அடைந்தனர். செங்கல்பட்டில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...