எழுச்சித்தமிழர் பிறந்தநாள் தமிழர் எழுச்சி நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஆகத்து 17விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் தமிழர் எழுச்சிநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்தநாளில் காஞ்சி மாவட்ட செயலாளர் செயல்வீரர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் ஆணைக்கிணங்க நமது காஞ்சி மாவட்டத்தில் பரவலாக அனைத்து முகாம்களிலும் இந்நாள் சிறப்பாக நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடப்பட்டது. காஞ்சி மாவட்ட ஊடக மையத்தின் சார்பில் காஞ்சிபுரம் வள்ளலார் சிறுவர் இல்லத்தில் காலை சிற்றுண்டி, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுகோல் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஒன்றியம், நகரம், பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவ்ன் அவர்கள் தலைமையில் நகரத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஓரிக்கை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மாகறல் பகுதியில் ஏழை மக்களுக்கு வேட்டி சேலை , மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனாக்கள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் ஆ.அம்பேத்கர்வளவன், தலைமையேற்று உதவிகள் வழங்கினார். திருமாதாசன், நா.டேவிட், ஸ்டாலின், தம்பிதுரை, ஆதவன் மற்றும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர்.
