மாமல்லபுரத்தில் மின்சாரம், குடிநீர் இணைப்பு தருவதற்கு விதித்த தடையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ராதன சின்னங்களை தொல்பொருள் துறை பராமரிக்கிறது. 6 மாதங்களுக்கு முன், புராதன சின்னங்களை சுற்றி 300 மீட்டர்
தூரத்துக்கு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும்
, மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு தருவதற்கும் தொல்பொருள் துறை தடை விதித்தது.
இதைக்கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், கண்டன முழக்கம் எழுப்பினார். மாவட்ட துணை செயலாளர் கிட்டு தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவா, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அன்பு வரவேற்றார். மாநில நிர்வாகி பு.பே.கலைவடிவன் உட்பட பலர் பேசினர் மற்றும் பெரும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர் .
காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன், பாஜ நகர தலைவர் ஸ்ரீதர், தமுமுக நகர தலைவர் பாரூக் அலி, வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரன், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் புனிதவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.