காஞ்சி மாவட்ட செயற்குழுவில் எதிர்வரும் கட்சி நிகழ்வுகளை சிறப்பிப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
10.08.2010 அன்று நமது காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது. காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் சிறப்புரை
ஆற்றி கூட்ட தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கையொலி எழுப்பி தீர்மானங்களை ஆதரித்தனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார்.
இச்செயற்குழு கூட்டத்தில் நமது மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான நமது காஞ்சிதிருமா.நெட்டின் செயல்பாடுகளை மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் பாராட்டி, ஊடக மையத்தின் மாவட்ட செயலாளரும் காஞ்சிதிருமா.நெட்டின் பொறுப்பாசிரியருமான பருத்திகுளம் மதி.ஆதவன் அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பு.பே.கலைவடிவன், லு.அருள், கராதே பாண்டியன், முத்தழகன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தே.தென்னவன், காஞ்சி அம்பேத்கர்வளவன், இளையவளவன், மேனகாதேவி, தி.வ.எழிலரசு, மதி.ஆதவன் உள்ளிட்ட பெருந்திரளான விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள் :
1. எம்மின விடியலுக்கு தன தலைமகன் எழுச்சித்தமிழரை நமக்கு வழங்கிய அன்புத்தந்தை மறைந்த அய்யா ச.தொல்காப்பியனாருக்கு இச்செயற்குழு செம்மாந்த வீரவணக்க அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. இனிவரும் காலங்களில் நமது வாழ்க்கை மற்றும் இயக்க நிகழ்வுகளில் புரட்சியாளர் அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன் போன்றோர்களை அடையாளப்படுத்துவதை போல மறைந்த அய்யா தொல்காபியனாரையும் அடையாளப்படுத்திட வேண்டுமென இச்செயற்குழு தோழர்களை கேட்டுக்கொள்கிறது.
2. ஆகத்து 17நமது தலைவர் எழுச்சித்தமிழரின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருவதை நாம் அறிவோம். இந்த ஆண்டு தலைவரின் தந்தை இறந்த ஓராண்டுக்குள் தலைமையில் இந்நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றாலும் நமது மாவட்டத்தில் நமது தலைவரின் பிறந்தநாளை மிக உற்சாகத்தோடு நாம் கொண்டாடவில்லை என்றாலும் தோழர்களை ஆங்காங்கே ஒலிப்பெருக்கி அமைத்து, துண்டறிக்கை சுவரொட்டி ஒட்டி, தட்டி விளம்பரங்கள் வைத்து, கொடித் தோரணங்களை கட்டி, மரம் நடுதல், மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தி ஏழை எளிய மக்களுக்கும். பள்ளி மாணவ, மாணவியருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற மக்களின் பயன்களில் தனைகளை ஈடுபடுத்தி சிறப்பாக செய்திடல் வேண்டுமென்று இச்செயற்குழு தோழர்களைக் கேட்டுக்கொள்கிறது.
3. செப்டம்பர் 18 மாவீரன் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளின் நமது மாவட்டத்தின் சார்பில் அவரது பிறந்த ஊரான கோழியாளத்தில் கட்டி வருகின்ற நினைவு மண்டபத்தில் நாம் அனைவரும் கூடி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது நினைவு தூணுக்கு மலை வளையம் வைத்தும் வீரவணக்கம் செலுத்துவது என்றும் அவரது நினைவு நாளில் தத்தமது பகுதியில் சுவரொட்டி ஒட்டியும் தட்டி விளம்பரங்கள் வைத்தும் அடையாளப்படுத்துவதுடன் கோழியாளத்தில் அனைவரும் திரண்டு வந்து தோழர்கள் வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்றும் இச் செயற்குழு தோழர்களைக் கேட்டுக்கொள்கிறது.
4.எதிர்வரும் செப்டம்பர் 26 சென்னையில் நம் தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடக்கவிருக்கின்ற தமிழர் இறையாண்மை மாநாட்டிற்கு பெருந்திரளாக கலந்து கொள்வதென்றும், அதற்க்கு முன்பாக அதற்க்கு பல வகைகளில் விளம்பரம் செதிட வேண்டும் எனவும் இச்செயற்குழு தோழர்களைக் கேட்டுக்கொள்கிறது.
5. அக்டோபர் 10 பஞ்சமி நிலா மீட்பு போராளிகள் சான் தாமசு - ஏழுமலை ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி நடக்கவிருக்கின்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். அந்த நாளை சிறப்பிக்க இச்செயற்குழு தோழர்களைக் கேட்டுக்கொள்கிறது.
6. காஞ்சி மாவட்டத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் தலைவர் நமக்கு கொடுத்த இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் உறுப்பினர்கள் என்ற இலக்கை நாம் இன்னும் எட்டவில்லை. நாம் இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கூட எட்டவில்லை. ஆகவே துணை நிலை மேலிடப் பொறுப்பாளர்கள் அதனை கவனத்தில் கொண்டு நகர. ஒன்றிய, பேரூர் செயர்க்குழுக்களில் பூர்த்தி செய்த படிவத்துடன் அதற்க்கான தொகையையும் ஒப்படைக்க வேண்டும் என இச்செயற்குழு தோழர்களைக் கேட்டுக்கொள்கிறது.
இவன்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சி மாவட்டச் செயலாளர்.