09.08.2010 அன்று மறைமலை நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏரமநூர், பணங்கோத்தூர் , அருந்ததியர் பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடுக்கடு வசதி, வீட்டுமனை வழங்கக்கோரி கண்டன
ஆர்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது.
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தே.தென்னவன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் த.பார்வேந்தன், பு.பே.கலைவடிவன், லூ.அருள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இளையவளவன், தி.வ.எழிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மறைமலை நகர் விடுதலைச் சிறுத்தைகள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
