விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
காஞ்சிவரம் மாவட்டம்
செயற்குழு கூட்டம்
நாள் : 10.08.2010, செவ்வாய்க்கிழமை, காலை 10 மணி,
பொருள் :
- நம்மின விடியலுக்கு தன தலைமகன் எழுச்சித்தமிழரை நமக்கு வழங்கிய அன்புத்தந்தை மறைந்த அய்யா ச.தொல்காப்பியனாரின் படம் திறந்து புகழஞ்சலி செலுத்துதல்,
- ஆகத்து 17 தமிழர் எழுச்சிநாளில் நமது மாவட்டத்தில் நாம் மேற்கொள்வது குறித்து ;
- செப்டம்பர் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெறவிருக்கிற தமிழர் இறையாண்மை மாநாட்டை சிறப்பித்தல் குறித்து,
- செப்டம்பர் 18 மாவீரன் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினைவு நாள் குறித்து ,
- அக்டோபர் 10 பஞ்சமி நிலமீட்பு போராளிகள் சான்தாமசு - ஏழுமலை அவர்களின் நினைவு நாளில் காரனை மண்ணில் எழுச்சித்தமிழர் பங்குபெறும் நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டமும் - கொத்தடிமை ஒழிப்பு முன்னணியின் தொடக்க விழாவும் நடைபெறுவதை சிறப்பித்தல் குறித்து,
- தீவிர உறுப்பினர் சேர்த்தல் குறித்து,
- ஒன்றிய, நகர, பேரூர் செயற்குழு கூட்டங்கள் நடத்துவது குறித்து;
குறிப்பு:
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில, மாவட்ட, நிர்வாகிகள் துணை நிலை அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் - மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், முகாம் நிர்வாகிகள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும்.
நமது மாவட்டத்தின் துணைநிலை அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் களப்பணியாற்றாத தமது மாவட்ட துணைச் செயலாளர்கள், நிதிச் செயலாளர் பட்டியலை மாவட்ட தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவன்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சிவரம் மாவட்டச் செயலாளர்.
