Sporty Magazine official website | Members area : Register | Sign in
இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சீபுரம் முத்தமிழ்ச்சங்கம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு அகம்பன் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. 
31.07.2010 அன்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் காஞ்சிபுரம் முத்தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மானாட்டம்,மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு
நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்நிகழ்ச்சிக்கு தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சக்தி கமலம்மாள் அவர்களும் பங்கேற்றார்.முத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில்பேசியவர்கள் தமிழை வளர்க்க ஐந்தாவது தமிழ்ச்சங்கம் உருவாக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

இவர்களின் கோரிக்கையை உள்வாங்கிக்கொண்டு எழுச்சிதமிழர் உரையாற்றிய போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் ஐந்தாம் தமிழ்ச்சங்கம் உருவாவதற்காக அனைத்து முயற்சிகளையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் என்றார்.

தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு காஞ்சிபுரம் நகர எல்லை துவக்கமான பொன்னேரிக்கரையில் இருந்து சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், த.பார்வேந்தன், ஆ.அம்பேத்கர்வளவன், லூ.அருள், பி.பா.கோ.குமரன், தி.வ.எழிலரசு, பருதிகுளம் மதி.ஆதவன், மேனகாதேவி கோமகன் உள்ளிட்ட திரளான விடுதலைச் சிறுத்தைகளும் , பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...