காஞ்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
திருப்போரூர் அடுத்த கருங்குழிபள்ளம் கிராமத்தில், அரிஜன நில மீட்பு சங்கத்துக்கு வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி, கருங்குழிபள்ளம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட துணைச் செயலாளர் கிட்டு தலைமை வகித்தார். நிர்வாகிகள் வீரவளவன், கணேசன், பெய்யனூர் ஊராட்சி துணைத்தலைவர் செல்லக்குமார் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் தமிழ் இனியன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலை செழியன் கண்டன முழக்கம் எழுப்பினார். அரிஜன நில மீட்பு சங்க சட்ட ஆலோசகர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#1963ம் ஆண்டு அரிஜன நில மீட்பு சங்கத்துக்கு தானமாக வழங்கிய 100 ஏக்கர் நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.
#போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
#பொய் வழக்கு போட்ட காவல் துறையினர், தங்களது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.