Sporty Magazine official website | Members area : Register | Sign in
இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தலைவரின் தந்தை தொல்காப்பியன் இயற்கை ய்தினார்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை ச.இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்கள் இன்று (15.07.2010) இரவு சுமார் 8.00 மணியளவில் சென்னை, இராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.
கடந்த 6 மாத காலமாக நரம்புச் தளர்ச்சி நோயால் (பார்க்கின்சன்) பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 5 ஆம் தேதியிலிருந்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிரச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் திடீரென உருவான நிமோனியா தொற்றினால் நுரையீரல் செயலிழந்து செயற்கை சுவாச சிகிச்சையும் பலனின்றி இன்று இரவு இயற்கை எய்தினார்.
111 

DSC_1921 

DSC_1959 

DSC_3994 

DSC_4048


அவரது திருவுடல் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக எண்.ஆர்.62, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, இரண்டாம் நிழற்சாலை, வேளச்சேரியில் உள்ள ”தாய்மண் அறக்கட்டளை” அலுவலகத்தில் நாளை (16.07.2010) நண்பகல் வரை வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இவண்
வன்னி அரசு
மாநிலச் செய்தி தொடர்பாளர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...