தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நினைவு மண்டபத்தில் எழுச்சித்தமிழர்அஞ்சலி !
07.07.2010 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் கோழியாலத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் பெரும் திரளான கட்சித்தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் எழுச்சித்தமிழர் அவர்கள் அஞ்சலி செலுத்திப்பின் எழுச்சி உரை ஆற்றியதிலிருந்து,
தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஒருவர் ஆவார்.
150 ஆண்டுகளுக்கு முன்னர் தலித் சமூகத்தினருக்கு இருந்த அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறகளையும் மீறி தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.
