Sporty Magazine official website | Members area : Register | Sign in

பையனூரில் லாரி மோதி அம்பேத்கர் சிலை உடைப்பு : : விடுதலைச் சிறுத்தைகள் மறியலால் உடனடியாக புதிய சிலை திறப்பு !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
மாமல்லபுரம் அருகே பையனூர் பழைய மாமல்லபுரம் சாலையில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு பையனூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற மணல் லாரி, சிலை இருந்த பீடம் மீது மோதியது. பீடம் இடிந்து, சிலையும் நொறுங்கியது.
இதனை அறிந்த விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலை செழியன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் கிட்டு, மாமல்லபுரம் ஒன்றிய துணை செயலாளர் சிவா, பையனூர் ஊராட்சி துணை தலைவர் செல்வகுமார், உட்பட 300க்கும் விடுதலைச் சிறுத்தைகள்  பழைய மாமல்லபுரம் சாலையில் மறியல் செய்தனர்.
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பத்மஜாதேவி, தாசில்தார் கணேசன், மாமல்லபுரம் டி.எஸ்.பி. சம்பந்தமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ஞானவேல், அசோகன் ஆகியோர் வந்து,  பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலை செழியன் புதிய சிலை வைக்கும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்றார்.
இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் புதிய சிலை கொண்டுவரப்பட்டது. சிலை இருந்த பகுதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், எதிர்திசையில் புதிய பீடம் அமைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்டது. புதிதாக வைக்கப்பட்ட அம்பேத்கர்  சிலைக்கு விடுதலை சிறுத்தைகள்  மாலை அணிவித்து  பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...