மாமண்டூர் தனியார் குளிர்பான தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில், தொழிற்சாலை வாசல் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பார்வேந்தன், லூ.அருள், கலைவடிவன், மாவட்ட நிர்வாகிகள் அம்பேத்கர்வளவன் , தமிழரசன், எழிலரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 2 பேர் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 41 பேருக்கு மீண்டும் வேலை, 480 நாட்கள் வேலை செய்த ஒப்பந்த தொழிலாளருக்கு பணி நிரந்தரம், விலைவாசி அடிப்படையில் சம்பள உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி கோஷமிட்டனர்.