விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வீரவணக்க பேரணி
பள்ளிக் குழந்தைகளான ராமன், லட்சுமணன், பூபதி (40) ஆகியோர் கடந்த மாதம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தனர்.
இவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் வீரவணக்க பேரணி திருக்கழுக்குன்றத்தில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சிறுத்தை கிட்டு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் பேரணியை தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையம் அருகே சென்று இறந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பொருளாளர் இளையவளவன், வணிகர் அணி செயலாளர் தமிழ்வளவன், விவசாய அணி செயலாளர் தமிழினியன்உட்பட பலர் கலந்து கொண்டனர்