Sporty Magazine official website | Members area : Register | Sign in

திருமண விழா !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
2011ல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் 1லட்சம் பெண்கள் இருப்பார்கள் தொல்.திருமாவளவன்!

 
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பூவை மு.வல்லரசுவின் இல்லத்திருமணவிழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு வல்லரசுவின் மகள் தமிழரசி மற்றும் மணமகன் விஜயகாந்த் ஆகியோரை வாழ்த்தினார்.

விழாவில் பேசிய தொல்.திருமாவளவன், 2011-ஆம் ஆண்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் ஒருலட்சம் ஆண்கள், உறுப்பினர்களாக இருப்பார்கள் இதற்கு நிகராக பெண் உறுப்பினர்கள் 1லட்சம் பேர் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் மாவட்டச் செயலாளர் விடுதலைச்செழியன், துணைச் செயலாளர் அம்பேத்கர் வளவன், கருத்தியல் பரப்புச் செயலாளர் பார்வேந்தன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...