வேலூரில் எழுச்சித்தமிழர் உள்பட சுமார் 5000க்கு மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது
வேலூரில் பிரம்மாண்டமான கோட்டைக்குள் அமைந்துள்ள மசூதி 1750_ல் நிர்மாணிக்கபட்டதாகும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்த மசூதி தற்போது இந்திய தொல் பொருள் துறையின் கட்டுபாட்டின் கீழ் இருந்து வருகின்றது.தற்போது இந்த மசூதியில் தொழுகைக்கு அனுமதிப்பதில்லை நுழைவாயில் மூடப்பட்டுள்ளது இதனை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமை தாங்கினார் .வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் துறை கட்டுபாட்டில் இருந்தது அந்தளவிற்கு விடுதலை சிறுத்தைகள் எழுச்சியோடு போராட்டத்தை நடத்தினர் .பல்லாயிரகணக்கான இசுலாமியர்கள் கலந்துகொண்டனர்.எந்த ஒரு அரசியல் கட்சியும் ,இசுமாமிய இயக்கங்களும் நடத்திடாதா மசூதி நுழைவு போராட்டம் விடுதலை சிறுத்தைகளால் நடத்தப்பட்டு எழுச்சித்தமிழர் உள்பட சுமார் 5000க்கு மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர் .இந்த செய்தி அறிந்து தமிழகம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் மறியலில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யபட்டார்கள் .
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...