இத்தகைய பாராட்டு விழாவை ஒருங்கிணைத்திருந்தார் எழுச்சித்தமிழரின் தனிச்செயலாளரும் கேரளா மாநில அமைப்புச்செயலாளரான இளஞ்.சேகுவேரா அவர்கள். கேராளா மாநிலம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் தோழர்கள் ஆரவாரத்தோடு ஆற்பரித்தனர்.முணாறு மலையில் நடைப்பெற்ற பாராட்டு விழா ஒரு மாநாடு போல் அமைந்தது.அத்தகைய பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக எழுச்சித்தமிழருடன் மதுரையில் இருந்து முணாறு வரை கடும்மலைபகுதியில் பயணம் செய்த விடுதலைச்சிறுத்தைகட்சி தோழர்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது அத்தகைய பாராட்டு விழா.
கேரள மாநிலத்திற்கு செல்லும் வழியில் 20/12/2009 அன்று காலை 9.00 மணியளவில் எழுச்சித்தமிழர் அவர்கள் தேனி மாவட்டம் விடுதலைச்சிறுத்தைகளின் துணைநிலை அமைப்பான தொழிலாளர் விடுதலை முன்னணி பேர் பலகையை திறந்துவைத்தார்.
எழுச்சித்தமிழர் அவர்களுக்கு தேனியில் இருந்து முணாறு செல்லும் வரை பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.