Sporty Magazine official website | Members area : Register | Sign in

மதுராந்தகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - காணொளி !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :




காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரசநல்லூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னியர் சமுதாய சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தி அவர்களை ஊருக்குள்ளேயே முடக்கி வைத்துள்ளனர். இதனை கண்டித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்க சென்ற தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதே காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து அடக்கு முறையை கையாண்டுள்ளனர் .

இதை கண்டிக்கும் விதமாக நீதி கேட்டு போராடிய நமது காஞ்சி மாவட்ட செயலாளர் செயல்வீரர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளனர்.


தமிழக காவல் துறையை காஞ்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது!

தமிழக அரசே!


எங்கள் மாவட்ட செயலாளர் மீது தொடுத்துள்ள பொய் வழக்கை எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப்பெறு !


பரசநல்லூர் கிராம தாழ்த்தபட்ட மக்களை சாதி வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்று !


சேரிமக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை திரும்பப்பெறு !

பொய்வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய் !



பொய்வழக்கும் கொடுஞ்சிறையும் - போராளிகளை
என்ன செய்யும் ! - எழுச்சித்தமிழர்!
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...