Sporty Magazine official website | Members area : Register | Sign in

முழக்கங்கள்!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல ! 
இளிச்சவாயர் கூட்டமும் அல்ல ! 
சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள். 

அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி ! 

உன்னைப் படி ! தாய் மண்ணைப் பிடி ! 

திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! 
திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !

அடக்க நினைத்திடும் சிறைச்சாலை 
அது அரசியல் கற்பிக்கும் பாடச்சாலை ! 

தலை நிமிர சேரி திரளும் ! அன்று தலை கீழாய் நாடு புரளும் ! 

சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும் ஆதிக்க வெறி 
சாதியத்தின் தலை நறுக்கி பகை முடிக்கும் !

படை நடுங்கிட சீறி எழும்பு - நாளை 
பழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு ! 

நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம் ! 
நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறி பாய்தல் வீரம் ! 

பாதையில் குறுக்கிடும் தடை மீறு ! 
அதிரடி பாய்ச்சலில் படைத்திடு வரலாறு ! 

கேட்பது பிச்சை ! மீட்பது உரிமை ! 

எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்ல 
கலகத்தின் சினைகள் ! 

அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு - சாதியின் 
உச்சந்தலையில் இடியாய் இறங்கு ! 

சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் ! வரலாறு மாறும் ! 
ஒப்பாரி ஒலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை ! 

பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்னச் செய்யும்.

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் ! 
எளியமக்களுக்கும் அதிகாரம் !

ஒரு நாள் நிச்சயம் விடியும் - அது 
உன்னால் மட்டுமே முடியும் ! 

எத்தனைக் காலந்தான் பொறுத்திறுப்பாய் - அட 
எழுந்திட வேண்டாமோ எரிநெருப்பாய் ! 

மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல! 
மடுவை மலையாக்கு ! மண்ணைச் சிவப்பாக்கு 
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...