Sporty Magazine official website | Members area : Register | Sign in

தொடரும் தலித்துகள் படுகொலைகள் - விடுதலைச்சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
24.4.13 நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பிரமுகர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

போலீஸ் நிலையம் முன்பு கூலிப்படையால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கூலிப் படையினர் பின் தொடர்வது தொடர்பாக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிவித்த பின்பும் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. போலீசாருக்குச் சவால்விடும் வகையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றார்.
 http://www.youtube.com/watch?v=UrNKZysk8rw&feature=share
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...