Sporty Magazine official website | Members area : Register | Sign in

உலக மகளிர் தினத்தன்று காஞ்சிபுரம் மறைமலைநகரில் விடுதலைச்சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போராட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
08.03.2013 உலக மகளிர் தினத்தன்று காஞ்சிபுரம் மறைமலைநகரில் விடுதலைச்சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போராட்டம்.

மறைமலைநகர் கடம்பூர் கிராமத்தில், ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள், இசுலாமியர்கள், கிருத்துவர்கள் உள்ளிட்ட 300 குடும்பத்தினர் சுமார் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து வசித்து வரும் இடத்தை வருவாய்த் துறையினர் எந்தவித முன்னறிவிப்புமின்றி பொதுமக்களின் உடைமைகளோடு வீடுகளை இடித்து அகற்றியதைக் கண்டித்து மறைமலைநகர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று 08.03.2013 உலக மகளிர் தினத்தன்று மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.





காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார். மாவட்டத் துணை செயலாளர் கேது (எ) தென்னவன் தலைமை வகித்தார்.

கட்சியின் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் த.பார்வேந்தன், கராத்தே பாண்டியன், பாசறை அ. செல்வராசு, கலைவடிவன், வழ. தேவ அருள்பிரகாசம், செங்கை தமிழரசன், எழிலரசு, உள்ளிட்ட கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் வீடுகள் இழந்து தவிக்கும் மக்களுக்கு அதே பகுதியில் பட்டா அளித்து வீடு கட்ட அனுமதி வழங்க கோரியும், உண்ணாவிரதம் இருந்த மக்களின் கோரிக்கைகள் வெற்றியடையவும் வாழ்த்திப் பேசினர்.

இந்த உண்ணாநிலை அறப்போரில் 500 பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களோடு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...