Sporty Magazine official website | Members area : Register | Sign in

செங்கல்பட்டு - பூந்தமல்லி சித்ரவதை முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பிரச்சாரப் பயணம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
செங்கல்பட்டு - பூந்தமல்லி சித்ரவதை முகாம்களை இழுத்து மூட வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பிரச்சாரப் பயணம்.

02.03.2013, செங்கல்பட்டு - பூந்தமல்லி சித்ரவதை முகாம்களுக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு - பூந்தமல்லி சித்ரவதை முகாம்களை இழுத்து மூடுவோம் என்ற என்ற முழக்கத்தை வலியுறுத்தி காஞ்சிபுரம் தொடங்கி செங்கல்பட்டு வரையிலான மோட்டார் சைக்கிள் பிரச்சாரப்பயணத்தை விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை அ. செல்வராசு அவர்கள் தொடங்கி வைத்து பேசினார்.



தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் தீனன் தலைமை வகித்தார்.தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன் முன்னிலை வகித்தார். மறுமலர்ச்சி தி.மு.க. வளையாபதி, மார்க்கசிய பெரியாரியப் பொதுவுடைமை கட்சி தோழர் நடராசன், உணர்ச்சிப் பாடகர் உலக ஒளி, மனித உரிமைகள் இயக்கம் அழகு ஒளி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய செயலாளர் டேவிட், அமைப்பாளர் ஸ்டான்லி, ஆகியோர் பயணத்தை வாழ்த்திப் பேசினர்.

வாலாஜாபாத் வந்த பயணக் குழுவினருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் த.அசோக்குமார், ஒன்றிய அமைப்பாளர் உதயசூரியன், பேரூர் நிதிச் செயலாளர் கிரி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் வரவேற்பு அளித்தனர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.


வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...