Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மீது தொடரும் பொய் வழக்குகளை கண்டித்து நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மீது தொடரும் பொய் வழக்குகளை கண்டித்து நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும் போராட்டம். 18.02.2013, காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், துணை செயலாளர் கிட்டு ஆகியோர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிந்து பிணையில் வெளி வர முடியாதபடி சதித் திட்டம் தீட்டும் காவல் துறையைக் கண்டித்து காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் நீதி கேட்டு முறையிடும் போராட்டம் காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்சியின் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் த.பார்வேந்தன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. காஞ்சி ஒன்றிய, நகர மேலிட பொறுப்பாளர் பாசறை அ. செல்வராசு அவர்கள் தோழர்களை ஒருங்கிணைத்திருந்தார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் மனைவி திருமதி.பாரதி, சிறுத்தை கிட்டு அவர்களின் மனைவி திருமதி.சசிகலா, கட்சியின் காஞ்சி மாவட்ட முன்னணி பொறுப்பாளர்களுடன் மாவட்டத்தின் பல்வேறு இருந்து 500 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 




செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம், 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...