Sporty Magazine official website | Members area : Register | Sign in

அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! அமிலத் தாக்குதல் குறித்த சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றுக! மத்திய மாநில அரசுகளுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த வினோதினியின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அந்தக் கொடுமையைச் செய்தவான் மட்டுமின்றி அவனுக்கு உடந்தையாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும். வினோதினியின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

ஒரு பெண்ணின்மீதான வன்கொடுமைத் தாக்குதல்களில் அமிலத் தாக்குதல் என்பது மிகவும் குரூரமானதாகும். தாக்குதலுக்கு ஆளான பெண் உயிரோடு இருந்தாலும் இல்லைஎன்றாலும் அமிலத் தாக்குதல் குற்றத்தை நீதிமன்றங்கள் அரிதினும் அரிதான குற்றமாகக் கருதவேண்டும். அமிலத் தாக்குதல் குறித்து கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களையும் கூட்டி அமிலத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் , அதனால் பாதிக்கப்படுவோருக்கு அளிக்கப்படவேண்டிய உதவிகள் குறித்தும் விவாதித்து சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டுவருமாறு அந்த ஆணையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப , அமிலத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறோம். சிறப்புச் சட்டம் உருவாக்கப்படுவதற்காகக் காத்திருக்காமல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் அமில விற்பனையை முற்றாகத் தடை செய்ய தமிழக , புதுவை அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல் .திருமாவளவன்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...