Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் மாவட்டம், மேற்கு மண்டல செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

காஞ்சிபுரம் மாவட்டம், மேற்கு மண்டல செயற்குழு கூட்டம்  மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம், மேற்கு மண்டல செயற்குழு கூட்டம் 24.12.2012 அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக விருந்தினர் மாளிகையில் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் மறைந்த மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் காஞ்சி ஒன்றியம், நகரம், செவிலிமேடு பேரூர் பகுதிகளுக்கு தோழர் பாசறை செல்வராசு அவர்களை தற்காலிக மேலிடப் பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் அவர்கள் முன்மொழிந்தார். அதனை கூடத்தில் பங்கேற்ற அணைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். பின்னர் காஞ்சி ஒன்றியம், நகரம், செவிலிமேடு பேரூர் பகுதிகளுக்கு தோழர் பாசறை செல்வராசு அவர்கள் தலைமையில் ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்த நிர்வாக குழுவின் கூட்டம் 26.12.2012 புதன்கிழமை அன்று நடைபெறும் என்றும், 27.12.2012 பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டித்து அன்று சென்னையில் தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான மகளிர்களுடன் பங்கேற்பது என்றும், 03.01.2013 அன்று காலை 10 மணியளவில் ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்ட செயற்குழு, மதியம் 3 மணிக்கு காஞ்சி ஒன்றியம், நகரம், செவிலிமேடு பேரூர் பகுதிகளுக்கான செயற்குழு காஞ்சிபுரத்தில் நடத்துவது குறித்தும், 06.01.2013 அன்று எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெறும் மறைந்த மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்கள் குடும்பத்திற்கு நிதியளிப்பு மற்றும் அவரது திருவுருவப் படத்திறப்பு பொதுகூட்டத்திற்கு திரளான தோழர்களோடு கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


ஊடக மையம் - விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...