திச-6 பெரியார் திடலில் விடுதலைச் சிறுத்தைகள்
நடத்திய தலித் இசுலாமியர் எழுச்சிநாளில் எழுச்சித்தமிழர் தலைமையில்
நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு
செய்தனர் ... தடா ரகீம், கவிஞர். காசிமுத்து மாணிக்கம், எழுத்தாளர்
பாரதி கிருஷ்ணக்குமார் , அடையார் இமாம் சலிவுதீன் பாகவி, சமூக ஆர்வலர்.
மனுசியபுத்திரன் , திரு.பாக்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
புரட்சியாளர் அம்பேத்காரும், சிறுபான்மையின ஜனநாயகமும் என்ற தலைப்பில் எழுச்சித் தமிழர் சிறப்புரை வழங்கினார்."காலம் காலமாக தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினரை ஆதிக்க சக்திகள் அடக்கிவருவது தொடர்கிறது. அந்தவரிசையில் தான் தர்மபுரி வன்கொடுமையும் நடந்துள்ளது. தர்மபுரியில் 20 ஆண்டுகளுக்கு மேலாகநக்சல்பாரி இயக்கங்கள் சாதியை எதிர்த்தும், கந்து வட்டி கொடுமைகளை எதிர்த்தும் போராடி வந்தனர்.
இதனால் தலித்துகளும், உழைக்கும் வன்னியர்களும் இணைந்து ஒன்று சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்தனர். இதனால் அங்கு இரட்டை குவளை முறை, மது, கந்துவட்டி முறைகள் ஒழிக்கப்பட்டது. இதனை பொருத்து கொள்ளாத ஆதிக்க சக்திகள் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து பழி வாங்க காத்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் சில அரசியல் கட்சியினர் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திவந்தசாதியவாதிகள், ஆதிகாரவர்க்கத்துடன், கந்துவட்டிகாரர்களின் பலமும் ஒன்று சேர்ந்து தர்மபுரியில் இந்த செயலை அறங்கேற்றி உள்ளனர்.
ஆகவே சமூகத்தில் பலவீனமானவர்களாக இருக்கும் தலித் பெண்கள் சிறுபான்மை ஏழைகள் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று அம்பேத்காரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்" என்று எழுச்சித் தமிழர் பேசினார்.
இதில் எழுச்சித் தமிழரின் சாதூர்ய செயலைப் பாராட்டி அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.