Sporty Magazine official website | Members area : Register | Sign in

நன்கொடை என்கிற பெயரால் பல்லைக்கழகங்கள் வணிக நிறுவனங்களாக மாறி விட்டது - எழுச்சித்தமிழர்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

நன்கொடை என்கிற பெயரால் பல்லைக்கழகங்கள் வணிக நிறுவனங்களாக மாறி விட்டது என்று சிதம்பரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளபட்டுள்ள ஆசிரியர், ஊழியர்களை பாதிக்கும் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக்குறைப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து 15.11.2012 அன்று சிதம்பரம் காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

 

தமிழகம் முழுவதிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பற்றி பேசும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அதனை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். எனவே பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நிலையினை திரும்ப பெற வேண்டும். ஆள்குறைப்பு, ஊதியகுறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் பல்கலைக்கழகம் முடங்கி போய் கிடக்கிறது. தமிழக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது தான் ஏன் என்று தெரியவில்லை. 

பல்கலைக்கழகம் நூறு சதவீதம் தனியாருடையது அல்ல. அரசு நிதி உதவியில் இயங்கும் பல்கலைக்கழகமாகும். எனவே அரசு இப்பிரச்சினையில் தலையிட நூறு சதவீத பொறுப்பு உண்டு. காலவரையற்ற விடுமுறையினால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன் கருதி தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

மேலும் நன்கொடை என்கிற பெயரால் பல்கலைக்கழகம் வணிக நிறுவனமாக மாறி உள்ளதை, கல்வி சந்தை என்றும் கூறலாம். மேலும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பிடி.எஸ்., பி.இ., பி.எஸ்.சி. போன்ற படிப்புகளில் சேர தரகர்கள் மூலம் பணம் பெற்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் அடங்கும். இதனை தவிர தமிழகத்தில் பல்கலைக்கழகத்திற்கென்று பொதுவான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசிற்கு வேண்டுகோள் வைத்து பேசினார்
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...