Date : 21/11/11
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னையில் 21/11/11இன்று காலை 11 மணியளவில்-பனகல் மாளிகை அருகில் பால் விலையையும்,பேருந்து கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தியதை திரும்ப பெறு என வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில். ஆளும் அரசு எழுச்சி த்தமிழர் தொல்.திருமா பேசுவதுக்கு முன் வேண்டுமென்றே சுமார் 20 நிமிடம் மின்சாரத்தை தடை செய்தார்கள்.கொஞ்சம் நேரம் பொறுத்து பார்த்த சிறுத்தைகள் ஆவேசப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.5 நிமிடம் சாலை மறியல் செய்த உடனே மின்சாரத்தை வழங்கியது அரசு.